திடீரென்று பெய்த பலத்த மழையால் ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காலை முதல்கடுமையாக சுட்டெரித்த வெயிலினால் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல்பெரிதும் அவதிப்பட்டனர். 8- th april மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில்பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்நிலவியது.
பஞ்சு மார்க்கெட் நேருசிலை, பழைய பஸ் நிலையம், சங்கரன்கோவில் முக்கு, புதிய பஸ் நிலையம், காந்திசிலை ரவுண்டானா, ரெயில்வே பீடர் ரோடு வரை தொடர்ந்து மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
சத்திரப்பட்டி, தளவாய்புரம், சேத்தூர், தேவதானம், கோவிலூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
0
Leave a Reply